- விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய
ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)
திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு
பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று
சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து
தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான்,
எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர்
என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரங்களென்று கருதப் படுகின்றன.
ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார்
என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்
காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய
உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில்
திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்”
(எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார்.
இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல்
நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத்
தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.
ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல்
புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும்
சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி
பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப்
பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும்
விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல்
சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும்
முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும்
ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில்
அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு
(L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது;
அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில்
கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந
நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன.
கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை
தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே.
இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்;
அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல்,
சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை
எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில்
பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.
உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்து வேதாந்த
ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள்
காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக
யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து
உபயோகப் படுத்து கின்றனர்.
விக்ரக ஆராதனையும் தேவாலய நிர்மாணமும்
தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஜைநர்களினாலேயே ஏற்பட்டன.
சைவகோயில்களில் சந்நியாசிகளைக் கும்பிடுவது ஜைநப் பழக்கத்தில்
நின்று நேராகவே கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஜைநர்களா லேற்பட்ட
மற்ற எல்லாத் திருத்தங்களை விட மேலானவை, திராவிடர்களுடைய
ஞான, நீதி, அபிவிருத்திக்குக் காரணமா யிருந்தனவும், ஜைந
கல்விக் கழகங்களுக்கும் பிரசாரங்களுக்கும் போட்டியாக
ஏற்படுத்தப்பட்டனவுமான பாடசாலைகளேயாம்.
சுபம்!
No comments:
Post a Comment